அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை – 2026இல் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்: முன்னாள் அமைச்சர் காமராஜ். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 7 November 2025

அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை – 2026இல் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்: முன்னாள் அமைச்சர் காமராஜ்.


திருவாரூர், நவம்பர் 07 -

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில், அதிமுகவினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பாக மனு அளித்தனர்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காமராஜ், “SIR (Special Intensive Revision) என்பது அனைவரையும் வாக்காளர்களாக பதிவு செய்வதே நோக்கம். இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் உள்ளன. இதை திருத்த வேண்டும் என பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்றார்.


ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த காமராஜ், “அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார். அதற்கு பாரதிய ஜனதா கட்சியே பதிலளிக்கிறது,” என்றார். செங்கோட்டையன் 250 பக்க குற்றப் பத்திரிகையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது குறித்து கேட்கப்பட்டபோது, “250 பக்கம் கொடுத்தாலும், 2500 பக்கம் கொடுத்தாலும் அது வெற்று காகிதம் தான்,” என்று விமர்சித்தார்.


அதிமுக குறித்து அவர் கூறியதாவது: “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் குடும்ப அரசியல் இல்லை. 2026 ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதலமைச்சர் ஆவார்,” என்றார். இந்த நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் சிவா ராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், தொழிற்சங்க செயலாளர் கலியபெருமாள், நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்வேல், தமிழ்ச்செல்வன், வர்த்தக அணி செயலாளர் ரயில் பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தியாகராஜன், இணை செயலாளர் செல். சரவணன், மாவட்ட செயலாளர் சின்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad